ECONOMYPBTSELANGOR

ஆற்றோரம் இரசாயனப் பொருள் கண்டுபிடிப்பு- விசாரணையைத் தொடக்கியது சுற்றுச்சூழல் துறை

புத்ரா ஜெயா, பிப் 4– காஜாங், ஜாலான் ரெக்கோவில் சுங்கை லங்காட் ஆற்றோரம் சட்டவிரோதமான முறையில் இரசாயனப் பொருள் வீசப்பட்டது தொடர்பில் சுற்றுச்சூழல் துறை விசாரணையை தொடக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை விசாணையை முடுக்கி விட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் நோர்லின் ஜாபர் கூறினார்.

நேற்று மாலை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 21 தோம்புகளில் இரசாயனக் கலவைகள் நிரப்பப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த இரசாயனக் கலவை தரையில் கசிந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அந்த இரசாயனப் பொருள்களால் பொதுமக்களுக்கு எந்த விளைவும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய அப்பகுதி யாரும் நுழையாவண்ணம் மூடப்பட்டுள்ளதோடு அதன் மாதிரிகள் சோதனைக்காக இரசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

இச்சம்பவத்திற்கு காரணமான தரப்பினரை சுற்றுச்சூழல் இலாகா தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர்களை கைது செய்ய முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர்  சொன்னார்.

 


Pengarang :