ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நாடி, கோ டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு- மந்திரி புசார் வெளியிடுவார்

ஷா ஆலம், பிப் 9- சிலாங்கூர் மாநில தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரு திட்டங்கள் தொடர்பில் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை காலை 10.30 மணியளவில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

சிலாங்கூர் மாநில அரசின் அதிகாப்பூவ முகநூல் அல்லது ஹிஜ்ரா சிலாங்கூர் முகநூல் வாயிலாக இந்த அறிவிப்பை செவிமடுக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாடி எனப்படும் ஸ்கிம்  நியாகா டாருள் ஏசான் மற்றும் கோ டிஜிட்டல் ஆகிய இரு திட்டங்கள் தொடர்பில் மந்திரி புசார் அந்த முக்கிய உரையை நிகழ்த்தவிருக்கிறார்.

ஒரு கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் நாடி திட்டம் உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார்  2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்தார். சிறு வியாபாரிகள் குறைந்த பட்சம் ஆயிரம் வெள்ளி கடனுதவி பெறுவதற்கு இந்த திட்டம் துணை புரிகிறது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தில் இந்த நாடி திட்டம் பெண் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகைகள் தரும் வகையில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம்  அவர்கள் எஸ்.எஸ்.எம். வாணிப உரிமம் இன்றி ஊராட்சி மன்றங்களிடமிருந்து தற்காலிக லைசென்ஸ் பெற்று வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

மாநிலத்தில் இலக்கவியல் சார்ந்த தொழில் துறைகளில்  அதிகளவிலான இளைஞர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் கோ டிஜிட்டல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கணினி, திறன்பேசி போன்ற மின்னியல் உபகரணங்களை வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.

Pengarang :