ECONOMYPBTSELANGOR

பெட்டாலிங் மாவட்ட கோவிட்-19  மதிப்பீட்டு மையம் மெலாவத்தி அரங்கிற்கு மாற்றம்- (மதிப்பீட்டு மையங்களின் முழு பட்டியல்)

ஷா ஆலம், பிப் 9- பெட்டாலிங் மாவட்ட  கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தை (சி.ஏ.சி.) சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா இங்குள்ள மெலாவத்தி அரங்கிற்கு நேற்று மாற்றியது.

நோயாளிகளின் வசதிக்காக பெட்டாலிங் மற்றும் சபாக் பெர்ணம் சி.ஏ.சி. மையங்களில் கூடுதல் தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நீங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் வேளையில் ஏதாவது பிரச்னைகள் ஏற்படுமானால் உடனே சி,ஏ.சி. மையத்தை தொடர்பு கொள்ளுங்கள். மதிப்பீட்டு  குழுவினர் உங்களுக்கு உதவி புரிவர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

011-64055718 என்ற வாட்ஸ்அப் புலனம் தவிர்த்து, பெட்டாலிங் மாவட்ட சுகாதாரத் துறையின் சி.ஏ.சி. மையத்தை  011-58814350 மற்றும் 011-58814280 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மெலாவத்தி அரங்கம் மற்றும் சமூக மண்டபங்கள் தவிர்த்து, மாநிலம் முழுவதும் 19 சுகாதார கிளினிக்குகள் மற்றும் கிராம கிளினிக்குகளிலும் சி.ஏ.சி. மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சபாக் பெர்ணம் மாவட்டத்தைப் பொறுத்த வரை தற்போதுள்ள தொலைபேசி எண்கள் தவிர்த்து அங்குள்ள எட்டு சுகாதா  கிளினிக்குகளின் (கே.கே.) எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கே.கே. சுங்கை பெசார் – 03-32411358

கே.கே. சுங்கை லீமா – 03-32242823

கே.கே. சிகிஞ்சான் – 03-32410331

கே.கே. சபாக் – 03- 32161355

கே.கே. பாரிட் பாரு – 03-32136227

கே.கே. சுங்கை ஆயர் தாவார் – 03-32136227

கே.கே. பாகான் தெராப் – 03- 32162722

கே.கே. மெர்பாவ் பெர்டாரா – 03-321610777 

கோவிட்-19 நோய் கண்டவர்களின் உடல் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக இந்த சி.ஏ.சி மையத்தை சிலாங்கூர் அரசு கடந்த ஜனவரி மாதம் தொடக்கியது. இங்கு செய்யப்படும்  மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்பத்துவதா அல்லது மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதாக என்பது குறித்து தீர்மானிக்கப்படும்

சிலாங்கூர் மாநில சுகாதார அமைச்சின் முகநூ வாயிலாக சி.ஏ.சி. மதிப்பீட்டு மையம் தெடர்பான மேல் விபரங்களை பெறலாம்

 


Pengarang :