ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவினருக்கு உணவுப் பொருள் பகிர்ந்தளிப்பு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், பிப் 18- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஐந்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவுக் கூடைகள் கட்டங் கட்டமாக வழங்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

டாக்சி ஓட்டுநர்கள் (6,233 பேர்), பள்ளி பஸ் ஓட்டுநர்கள் (1,601 பேர்), கே.டிஇ.பி. குப்பை அகற்றும் லோரி ஓட்டுநர்கள் (8,432 பேர்), பூர்விக இல்லத் தலைவர்கள் (6,000) பேர், பி.பி.ஆர். மக்கள் வீடமைப்பு குடியிருப்பாளர்கள் (2,361 பேர்) ஆகியோரே இந்த உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளவர்கள் என்று அவர் சொன்னார்.

லெம்பா சுபாங் பி.பி.ஆர். குடியிருப்பு பகுதி வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் இருந்தாலும் அக்குடியிருப்பைச் சேர்ந்த 3,004 பேருக்கு மாநில அரசு தலா ஐம்பது வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

நாம் செய்கின்ற இந்த உதவி அளவில் பெரியதாக இல்லாவிட்டாலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சுமையை ஒரளவு குறைக்க இது உதவும் எனத் தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 13 லட்சம் வெள்ளி செலவில் உணவுக் கூடை உதவித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.


Pengarang :