ALAM SEKITAR & CUACASAINS & INOVASISELANGOR

சுற்றுச்சூழலை மாசுபடுத்திய பிளாஸ்டிக் மறுசூழற்சி தொழிற்சாலைக்கு வெ.75,000 அபராதம்

ஷா ஆலம், மார்ச் 5– சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு அறிக்கையின் அங்கீகாரம் பெறாமல் வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு  75,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பான அறிக்கையையும் அந்த தொழிற்சாலை உரிமையாளர் சமர்ப்பிக்கத் தவறியதாக சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் கூறினார்.

தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை 47 வயதான அந்த தொழிற்சாலை இயக்குநர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 75,000 வெள்ளி அபராதம் விதிப்பதாக நீதிபதி ரோபியா முகமது தீர்ப்பளித்தார்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் மாநில சுற்றுச்சூழல் துறை உறுதியாக செயல்படும் என்பதோடு இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று அதன் இயக்குநர் நோர் அஜிசா ஜாபர் கூறினார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தகவல் கொடுக்கும் பொது மக்களுக்கு தமது துறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையின் அங்கீகாரமின்றி வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்டதாக  அத்தொழிற்சாலைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் சட்டத்தின் 34ஏ(2)வது பிரிவின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பில் சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநருக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கத் தவறியதாக மீது 2014ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர விதிமுறைகளின்  5(1)(பி) பிரிவின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் அத்தொழிற்சாலை மீது சுமத்தப்பட்டது.


Pengarang :