ECONOMYNATIONAL

சிலாங்கூரில் நேற்று வரை 55,763 பேர் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 24– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை சிலாங்கூரில் 55,763 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் இந்த தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 452,919 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி பெற்றவர்களில் 422,058 பேருக்கு முதலாவது டோஸ் ஊசி செலுத்தப்பட்ட வேளையில் 30,861 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சிலாங்கூர் முதலிடம் வகிக்கும் வேளையில் 49,053 பேருடன் பேரா மாநிலம் அதற்கு அடுத்த நிலையில் உள்ளது. சபாவில் 40,842 பேரும் கோலாலம்பூரில் 36,66 பேரும் சரவாவில் 35,913 பேரும் பகாங்கில் 33,257 பேரும் பகாங்கில் 33,257 பேரும் ஜொகூரில் 30,868 பேரும் பினாங்கில் 29,568 பேரும் கெடாவில் 26,287 பேரும் கிளந்தானில் 19,716 பேரும் திரங்கானுவில் 19,090 பேரும் நெகிரி செம்பிலானில் 17,884 பேரும் மலாக்காவில் 10,727 பேரும் பெர்லிசில் 4,605 பேரும் லபுவானில் 2,343 பேரும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரை உட்படுத்தி தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கப்பட்டது.

 


Pengarang :