ACTIVITIES AND ADSECONOMYSELANGOR

1,351 மீனவர்களுக்கு பெட்ரோல் பற்றுச்சீட்டு- சிலாங்கூர் அரசு வழங்குகிறது

கிள்ளான், மார்ச் 27– சிலாங்கூர் மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள 1,351 மீனவர்களுக்கு பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டை வழங்கத் தொடங்கியுள்ளது.

இந்த பெட்ரோல் பற்றுச்சீட்டு உதவித் திட்டத்திற்காக மாநில அரசு 405,300 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹிஷாம் ஹஷிம் கூறினார்.

ஒவ்வொரு மீனவருக்கும் 300 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டு வழங்கப்படும். அவர்கள் ஷெல். பெட்ரோனாஸ். பி.எச்.பி. ஆகிய பெட்ரோல் நிலையங்களில் இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் மீனவர்களுக்கு இந்த உதவித் தொகை ஓரளவு ஆறுதலாகவும் சுமையைக் குறைக்கும் வகையிலும் இருக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பெட்ரோனாஸ் சுங்கை காப்பாரில்  நடைபெற்ற மீனவர்களுக்கு பெட்ரோலுக்கான பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டிலும் இதே போன்ற உதவித் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியதாக கூறிய அவர், மீனவர்களுக்கு உதவும் வகையில் இவ்வாண்டிலும் இத்திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாகச் சொன்னார்.

கடநதாண்டில் 801 மீனவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். இவ்வாண்டில் இந்த எண்ணிக்கை 1,351ஆக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.

 


Pengarang :