ECONOMYPBTSELANGORYB ACTIVITIES

மார்ச் 11ஆம் தேதி வரை 33 இடங்களில் கோவிட்-19 இலவச  பரிசோதனை

ஷா ஆலம், ஏப் 14– மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள 33 இடங்களில் இலவச கோவிட்- 19 பரிசோதனை இயக்கத்தை சிலாங்கூர் அரசு நடத்தியுள்ளது.

நோய்த் தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள மற்றும் புதிய தொற்று மையங்கள் உருவாகும் சாத்தியம்  கொண்ட பகுதிகளை இலக்காக கொண்டு இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளில் இந்த பரிசோதனை இயக்கமும் ஒன்றாகும் என்று முகநூல் வழி வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார். இம்மாதம் 4ஆம் தேதி வரை 20,000 பேர் இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளதாக மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக  இலவச  பரிசோதனை இயக்கங்களை மேற்கொள்வதற்கு மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அடர்த்தியான மக்கள் தொகை மற்றும்  நோய்த் தொற்று தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளை இலக்காக கொண்டு  மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு இறுதிக்குள்  50,000 பேருக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ள மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 


Pengarang :