ECONOMYNATIONAL

மூன்றாண்டுச்  சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் சமூக சேவை செய்ய அனுமதி

கோலாலம்பூர், ஏப் 16– அவசர காலச் சட்டத்தின் 2021ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட) (குற்றவாளிகளின் கட்டாய வருகை) விதியின் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இன்று முதல்  சமூக சேவை செய்ய அனுமதிக்கப்படுவர்.

முன்பு, மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சமூக சேவை செய்வதற்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

அவசர காலச் சட்டத்தின் 2021ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட)(குற்றவாளிகள் கட்டாய வருகை)  தொடர்பான அரசாங்க பதிவேட்டை தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகம் நேற்று வெளியிட்டது. 1954ஆம் ஆண்டு குற்றவாளிகள் கட்டாய வருகை சட்டத்தின் 5வது பிரிவின் திருத்தம் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளது. 

இதன் வழி, நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது தவிர்த்து சம்பந்தப்பட்டவர்  12 மாதங்களுக்கு மேற்போகாத காலக்கட்டத்தில் தினசரி நான்கு மணி நேரத்திற்கு மணி நேரத்திற்கும் மேற்போகாமல் சமூக சேவை செய்வதற்கு ஏதுவாக  தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மையத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என உத்தரவிட முடியும்.

அதேச சமயம், சம்பந்தப்பட்ட நபரின் தனி மனிதப் பண்பு, குற்றத்தின் தீவிரம் மற்றும் இதன் தொடர்பிலான இதர அம்சங்களையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு, பொருளாதா மீட்சி, பொது ஒழுங்கு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்த திருத்தம் உத்தரவாதம் வழங்குகிறது என்பதில் மாட்சிமை தங்கிய பேரரசர் மனநிறைவு கொண்டப் பின்னர் இந்த அவசர காலச் சட்டம் பிரகனடப்படுத்தப்படுகிறது.

.

 


Pengarang :