ECONOMYSELANGOR

ரமலான் சந்தைகளில் ஒரு சமயத்தில் 150 பேருக்கு மட்டும் அனுமதி- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், ஏப் 17– ரமலான் சந்தைகளில் ஒரு சமயத்தில்  150 பேர் மட்டுமே உணவு பொருள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்ட சித்தி மரியா மாமுட் கூறினார்.

அச்சந்தைகளில் கூடல் இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை அவசியம் என்று அவர் சொன்னார்.

பல ரமலான் சந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஒ.பி.) கடைபிடிக்கத் தவறி விட்டதாக  புகார்கள் எழுந்துள்ள காரணத்தால் இத்தகைய கடும் நிபந்தனைகள் அமல் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

சந்தைகளில் வியபார நடவடிக்கைள் வழக்கம் போல் நடைபெறுவதற்கு ஏதுவாக நாம் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்போம். இதன் வழி நாமும் பொருள்களை வாங்கும் அதே வேளையில் வட்டார பொருளாதார நடவடிக்கைகளுக்கும் புத்துயிரூட்ட முடியும் என்றார் அவர்.

ஸ்ரீ செர்டாங் தொகுதியிலுள்ள ரமலான் சந்தைக்கு வருகை புரிந்தப் பின்னர் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

ரமலான் சந்தைகளில் ஒரு சமயத்தில் 150 பேர் மட்டும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அடையாள அட்டை முறையை அறிமுகம் செய்துள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் நடவடிக்கையை அவர் பாராட்டினார்.


Pengarang :