UncategorizedWANITA & KEBAJIKAN

மூன்று வயது குழந்தைக்கு போதைப் பொருள்- வளர்ப்புத் தந்தையின் படுபாதகச் செயல்

நீலாய், ஏப் 21- வளர்ப்புத் தந்தையால் மூன்று வயது குழந்தை போதைப் பித்துக்கு ஆளானச்  சம்பவத்தை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மூன்று தினங்களுக்கு முன்னர் அக்குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையின் முடிவுகளை கோலாலம்பூர் துங்கு அஜிசா மருத்துவமனையின் (சிறார் மற்றும் மகளிர் சிகிச்சை பிரிவு) மருத்துவர்களிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளததாக  நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். முகமது பஸ்லி அப்துல் ரஹ்மான் கூறினார்.

அக்குழந்தை இம்மாதம் 14ஆம் தேதி  நீலாயில் உள்ள வளர்ப்புத் தந்தையின் பராமரிப்பில் இருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சென்னார்.

அக்குழந்தையின் செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததைக் கண்ட  தாயார் சிகிச்சைக்காக அந்த குழந்தையை மறுநாள் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அக்குழந்தையின் உடலில் ஆம்ஃபெத்தமினா மற்றும் மெத்தாபெத்தமினா ஆகிய போதைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

தையல்காரரான முகமது  ஃபரேஷ் காலிட் (வயது 38) என்ற அந்த வளர்ப்புத் தந்தை கடைசியாக எண் C-13-7 அப்பார்ட்மெண்ட் மாவார் செத்தியாவங்சா மற்றும் PT 8413 ஜாலான் 5/4B, தாமான் டேசா ஜஸ்மின், நீலாய்  என்ற முகவரியில் வசித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என நீருபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 20 ஆண்டுச் சிறை அல்லது பத்தாயிரம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(A) பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கூடுதல் பட்சம் மூன்றாண்டுச் சிறை அல்லது பத்தாயிரம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர  போதைப் பொருள் சட்டத்தின் 14(1) வது பிரிவின் கீழும் இச்சம்பவம் மீது விசாரணை நடத்தப்படுகிறது.


Pengarang :