NATIONALSELANGOR

பலாக்கோங்,சுங்கை ராமாலில் கோவிட்-19 பரிசோதனைக்கு 3,000 பேர் பதிவு

பாங்கி, மே 9- பலாக்கோங் மற்றும் சுங்கை ராமால் தொகுதிகளில் நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனைக்கு செலங்கா செயலி வாயிலாக சுமார் மூவாயிரம் பேர் பதிவு செய்திருந்தனர்.

கம்போங் பாரு பலாக்கோங் சமூக மண்டபத்தில் இன்று பிற்பகல் வரை 1,550 பேரும் பண்டார் பாரு பாங்கி, செக்சன் 7, பல்நோக்கு மண்டபத்தில் 1,200 பேரும் இந்த பரிசோதனைக்கு பதிவு செய்ததாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

நேற்று காஜாங் மற்றும் செமினியில் பதிவானதை விட இங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. இது ஊக்குமூட்டும் வகையிலான அறிகுறியாகும். பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இந்த சோதனையும் அதிக நேரம் பிடிக்காது. வெறும் மூன்று நிமிடங்களில் முடிந்து விடும் என்றார் அவர்.

பண்டார் பாரு பாங்கி, பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்- பரிசோதனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காக பொதுமக்கள் காலை மணி 7.45 முதல் வரிசையில் காத்திருந்ததாக கூறிய அவர்,  பொதுமக்கள் மத்தியில் நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என்றார்.


Pengarang :