ECONOMYHEALTHPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 30,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 24– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மே 8ஆம் ஆம் தேதி முதல் மாநில முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 29,239 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்றவர்களில் 1,494 பேரிடம் நோய்த் தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் https://screening.selangkah.mylogin  என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அல்லது செலங்கா செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என முகநூல் வாயிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

உலு லங்காட் மற்றும் கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த பரிசோதனை இயக்கம் இம்மாதம் 8ஆம்  தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும்.


Pengarang :