Anggota polis memeriksa surat kebenaran salah seorang pengguna jalan raya yang melalui sekatan jalan raya (SJR) di Jalan Persiaran Kota, Klang berikutan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) ketika tinjauan pada 14 Oktober 2020. Foto BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலைத் தடுப்பில் அமைச்சர் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்- போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், மே 30-  அமைச்சர் ஒருவர் சாலைத் தடுப்பில் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொருட்டு போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

இம்மாதம் 16ஆம் தேதியன்று செலுத்தத்தக்க ஆவணங்கள் இன்றி பயணித்த காரணத்தற்காக திரங்கானு மாநிலத்தின் கெமாமானில் உள்ள பெராசிங் சாலைத் தடுப்பில்  அந்த அமைச்சரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்த ஊடகத் தகவல்கள் கூறின.

இவ்விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அழைக்கப்படுவார்கள் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ தேவ் குமார் கூறினார்.

அந்த சாலைத் தடுப்பில் உண்மையில் என்ன நடந்தது? இச்சம்பவத்தில் குற்றத்தன்மை ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

-பெர்னாமா


Pengarang :