HEALTHPBTSELANGOR

வாகனங்களில் இருந்தவாறு கோவிட்-19 பரிசோதனை- இட வசதியைப் பொறுத்து அமல் செய்யப்படும்

கிள்ளான், மே 30– வாகனங்களில் இருந்தவாறு கோவிட்-19 இலவச பரிசோதனையை மேற்கொள்ளும் திட்டம்  இட வசதிக்கேற்ப அமல்படுத்தப்படும்.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ள இடங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுமே தவிர பரிசோதனையில் பங்கு கொள்ள முன்கூட்டியே பதிவு செய்தவர்களை மையமாக கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படாது என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி  முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இடங்களை தாங்கள்  பார்வையிட்டு அதன் வசதிகளை கண்டறிவதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட இடங்கள் விசாலமானவையாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் உள்ளதை உறுதி செய்த பின்னரே அங்கு பரிசோதனை இயக்கம் நடைபெற அனுமதி வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

சோதனைக்காக வரிசையில் நிற்கும் வாகனங்களால பரிசோதனையில் கலந்து கொள்ள வருவோருக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய போலீசாரின் ஆலோசனையும் இவ்விவகாரத்தில் நாடப்படும் என்றார் அவர்,

இது வரை மாநிலத்தின் 32 இடங்களில் நடத்தப்பட்ட இலவச பரிசோதனை இயக்கங்களில் இதே போன்ற அணுகுமுறை  கடைபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :