HEALTHNATIONALPBT

சபாக் பெர்ணமில் மூன்று வீடமைப்பு பகுதிகளில் பி.கே.பி.டி அமல்.-3,900 பேர் பாதிப்பு

பாக் பெர்ணம், மே 30– சபாக் பெர்ணம் மாவட்டத்திலுள்ள மூன்று வீடமைப்புப் பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அக்குடியிருப்புகளைச் சேர்ந்த 3,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாமான் பெர்த்தாமா, தாமான் செரெண்டா மற்றும் தாமான் பிரிமா  ஆகியவையே கடுமையான பொது முடக்கம் அமல் செய்யப்பட்ட அந்த மூன்று குடியிருப்புகளாகும்.

இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று தொடங்கி இரு வாரங்களுக்கு அமல்படுத்தப்படுவதாக சபாக் பெர்ணம் மாவட்ட அதிகாரி அம்ரி இஸ்மாயில் கூறினார்.

இந்த கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மருத்துவமனை பணியாளர்கள், நில அலுவலக மற்றும் உயர் கல்விக் கூட பணியாளர்களை உள்ளடக்கிய 876 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த மூன்று குடியிருப்புகளையும் சேர்ந்த  2,538 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 135 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ள 74 வயது முதியவர் ஒருவர் இத்தொற்றுக்கு பலியாகியுள்ளார் என்றார் அவர்.

 

 


Pengarang :