ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

செந்தோசா தொகுதியில் கோவிட்-19 பரிசோதனை- 1,200 பேர் பங்கேற்ப

கிள்ளான், மே 31– செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 1,200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்தவர்களை மட்டுமே எந்த எண்ணிக்கை உள்ளடக்கியிருந்ததாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹட்ரி ஹக்கிமி அப்துல் ரஹ்மான் கூறினார்.

பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள மண்டபத்திற்கு நேரில் வருபவர்களை சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சொன்னார்.

இன்று மதியம் வரை சுமார் 600 பேர் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டனர். இவர்களில் பெரும்பாலோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்தவர்களாவர் என்றார் அவர்.

இதேபோன்ற நிலை பண்டமாரான் தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 சோதனை இயக்கத்திலும் நிலவியதாக அவர் குறிப்பிட்டார். நாளை தொடங்கி முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்படுவதால் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ள பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக அவர் கூறினார்.

இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டவர்களில் சிலர் காய்ச்சல், இருமல், கண்களில் நீர் வடிதல், களைப்பு போன்ற அறிகுறிகளை கொண்டிருந்ததாகவும் அவர் சொன்னார்.


Pengarang :