HEALTHPBTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனை- சிலாங்கூரை மற்ற மாநிலங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்

சிப்பாங், ஜூன் 3– சிலாங்கூர் மாநில அரசு அமல் செய்துள்ளதைப் போல் நாட்டிலுள்ள பிற மாநிலங்களும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சோதனைகளின் வழி நோய்த் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களைத்  தனிமைப்படுத்த முடியும் என்று சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனிபா மைடின் கூறினார்.

இலவச பரிசோதனை இயக்கத்தின் வழி மாநில மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவி வரும் மாநில அரசின் நடவடிக்கையை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்றார் அவர்.

சைபர் ஜெயா, செரின் சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற டிங்கில் தொகுதி நிலையிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் இலவச  கோவிட்- பரிசோதனை இயக்கத்தை நடத்தி வருகிறது.

 


Pengarang :