ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய பணிக்கும் முதலாளிகளுக்கு அபராதம்

ஷா ஆலம், ஜூன் 8- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய பணிக்கும் முதலாளிகள் அல்லது நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

முதலாளிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிய  வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளதால் அவர்களுக்கு அபராதம்  விதிக்கப்படாது என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர்  டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அதே போல் தொழிலாளர்களை வேலையிடத்திலேயே தங்க நிர்பந்திக்கும் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவை மீறி அலுவலகம் வர கட்டாயப்படுத்தும் முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி.விதிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எஸ்.ஓ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கடந்த ஜூன் முதல் தேதி தொடங்கி இதுவரை 41 குற்றப்பதிவுகள் வர்த்தக மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :