MEDIA STATEMENTPBTSELANGOR

பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைகளைக் கையாள சிறப்பு தொலைபேசி சேவை

ஷா ஆலம், ஜூன் 15- சிலாங்கூரில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை கையாள சிறப்பு தொலைபேசி சேவை விரைவில் தொடக்கப்படவுள்ளது. இத்திட்ட அமலாக்கம் தொடர்பில் குடும்ப வன்முறை செயல்குழு உள்ளிட்ட தரப்பினருடன் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாக வனிதா பெர்டாயா சிலாங்கூர் அமைப்பின் தலைமை செயல்முறை அதிகாரி சித்தி கமாரியா அகமது சுப்கி கூறினார்.

மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் அவர்களைத் தலைவராக கொண்டு அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் அமல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நீண்ட நாட்கள் அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பலருக்கு மனோரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக பலர் உறங்கக்கூட முடியாத நிலையில் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றார் அவர். கடந்தாண்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்டது முதல் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமது அமைப்பு இந்த தொலைபேசி ஆலோசக சேவையை வழங்க முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :