HEALTHPress StatementsSELANGOR

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு உதவித் தொகைக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 16– கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு உதவித் தொகைக்கு தகுதி பெற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை மாதம் முதல் தேதி  தொடங்கி விண்ணப்பம் செய்யலாம்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1.200 மாற்றுத் திறனாளிகள் இந்த உதவித் திட்டத்தின் மூலம் பயன் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதற்கான விண்ணப்பத்தை  httips://www.anisselangor.com/bantuanoku எனும் அகப்பக்கம் வாயிலாக செய்யலாம். மேல் விபரங்களுக்கு 018-2567093/018-2356213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாகவும் சிலாங்கூர் மாநில சமூக நலத்துறையினால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை கொண்டிருப்பவர்களாகவும் இருப்பது அவசியம் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று  காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 500 வெள்ளி வழங்குவதற்கு ஏதுவாக கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தின் கீழ் 600,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :