ECONOMYHEALTHSELANGOR

ஐந்து தொகுகளில் மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம்- வார இறுதியில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 17– சிலாங்கூர் மாநில அரசின் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வார இறுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட பரிசோதனை இயக்கத்தின் போது ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்ட தொகுதிகளை இலக்காக கொண்டு இந்த சோதனை இயக்கம் நடத்தப்படுகிறது.

இந்த பரிசோதனை இயக்கம் தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டுள்ள பிரசுரம் ஒன்றில்  ஸ்ரீ செத்தியா மற்றும் தாமான் மேடான் தொகுதிகளில் வரும் சனிக்கிழமையன்று இலவச பரிசோதனை நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை சுங்கை துவா, கோம்பாக் செத்தியா மற்றும் தாமான் டெம்ப்ளர் ஆகிய தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும்.

இந்த பரிசோதனை இயக்கத்தின் போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது  சுயமாக பரிசோதனை செய்யும் கருவிகள் வழங்கப்படும்.

இந்த பரிசோதனை இயக்கம் சீராகவும் விரைவாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளும்படி பொது மக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த இயக்கம் இம்மாதம் 26ஆம் தேதி காஜாங்கிலும் 27 ஆம் தேதி உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதியிலும் நடைபெறும். 

 

 


Pengarang :