ECONOMYHEALTHNATIONAL

1,000 டெக்சஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் தொழிலாளர்கள் தடுப்பூசி பெற்றனர்.

அம்பாங், ஜூன் 19– இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கி இதுவரை சுமார் ஆயிரம் டெக்சஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசி பெறவிருக்கும் தொழில் துறை ஊழியர்களில் ஒரு பகுதியினராக  தங்கள் தொழிற்சாலையைச் சேர்ந்த 2,731  பணியாளர்கள் விளங்குவதாக  அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யோகன்நாயுடு சிவன்சாலம் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பல கட்டப் பேச்சுவார்தை மற்றும் தொழிற்சாலை வருகைக்குப் பின்னர் கடந்த புதன் கிழமை தடுப்பூசி செலுத்தும் தொடக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த தடுப்பூசியின் முதல் டோஸ் மருந்தளவை செலுத்தும் பணி இம்மாதம் 23 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு பிறகு இரண்டாது டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் எஸ்.ஒ.பி. விதிமுறை ஒரு போதும் தளர்த்தப்படாது. காரணம் நோய்த் தொற்றுக்கான அபாயம் இன்னும் உள்ளது. ஆகவே, கடுமையான நிர்வாக நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றார் அவர்.


Pengarang :