ECONOMYHEALTHPBT

சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம்- தினசரி 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த கிளினிக் செல்கேர் நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 29 சிலாங்கூர் மாநில அரசின் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ்  15 செல்கேர் கிளினிக்குகள் வாயிலாக தினசரி 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என கிளினிக் செல்கேர் நம்பிக்கை கொண்டுள்ளது.

ஒவ்வொரு கிளினிக்கிலும் தினசரி 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி முன்பதிவின் அடிப்படையில் தடுப்பூசி பெறுவோர் அழைக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

செல்கேர் கிளினிக்குகள் அளவில் சிறியவையாக உள்ளன. ஆகவே, தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய 65 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

ஷா ஆலம், பூச்சோங், ஸ்கைபார்க் சுபாங், யு.எஸ்.ஜே. சென்ட்ரல், டேசா மெந்தாரி, செந்தோசா, புத்ரா ஜெயா ஆகிய இடங்களில் உள்ள செல்கேர் கிளினிக்குகள் தடுப்பூசி செலுத்தும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இது தவிர, கோலாலம்பூரில் மெனாரா வேர்ல்ட்வைட், மெனாரா யுபிஎன், மெனாரா ஹப் செங், மெனாரா பங்குனான் ரோஹாஸ் பெர்காசா, மெனாதார ஒலிம்பியா, குயின்ஸ் அவென்யு செராஸ், கேஎல்ஒ ஸ்டேஷன், ஸ்ரீ ரம்பாய் ஆகிய இடங்களில் உள்ள செல்கேர் கிளினிக்குகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும்.

பொது மக்கள் எனும் https://selcareclinic.com/  அகப்பக்கம் வாயிலாக மேற்கண்ட செல்கேர் கிளினிக்குகளின் முழு முகவரியை பெறலாம்.


Pengarang :