ECONOMYMEDIA STATEMENTPBT

சிலாங்கூரில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத தொழிற்சாலைகள் அகற்றப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூன் 30– சிலாங்கூரில் செயல்படும் நூற்றுக்கணக்கான சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக மாநில அரசு கட்டங் கட்டமாக நடவடிக்கை எடுக்கும்.

அந்த தொழிற்சாலைகள் மீது  ஊராட்சி மன்றங்களின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  அறிக்கை ஒன்றில் கூறினார்.

ஊராட்சி மன்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சட்டவிரோத தொழிற்சாலைகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு- 

  • செலாயாங் நகராண்மைக் கழகம் -75 தொழிற்சாலைகள்
  • கோல லங்காட் நகராண்மைக் கழகம் – 27 தொழிற்சாலைகள்
  • சுபாங் ஜெயா மாநகர் மன்றம் – 23 தொழிற்சாலைகள்
  • கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் – 14 தொழிற்சாலைகள்
  • உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் – 7 தொழிற்சாலைகள்
  • சிப்பாங் நகராண்மைக் கழகம் – 2 தொழிற்சலைகள்

சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தை மாநில அரசு கடந்த 2008ஆம் ஆண்டில் அமல்படுத்தியது.     


Pengarang :