ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

உணவுப் பற்றாக்குறையை தவிர்க்க கோல சிலாங்கூரில் நெல் விவசாயத்திற்கு அனுமதி

ஷா ஆலம், ஜூலை 4– நாட்டில் அரிசி பற்றாக்குறைப் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நெல் விவசாய நடவடிக்கைளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், கோவிட்-19 பெருந்தொற்று பரவலைக் தடுப்பதற்கு ஏதுவாக நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பணியின் போது எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்த அனுமதியின் வழி உணவு விநியோக தொடர்புச் சங்கிலி துண்டிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய முடியும். கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட கோல சிலாங்கூர் மாவட்டத்தின் ஈஜோக் பகுதியில் உள்ள வயல்களில் விவசாயிகள் வழக்கம் போல் தங்களின் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அவ்விரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் அமல் படுத்தியுள்ளது.


Pengarang :