ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

மெந்தாரி கோர்ட் குடியிருப்பில் வசிக்கும் 9,000 பேர் நாளை தொடங்கி தடுப்பூசி பெறுவர்

ஷா ஆலம், ஜூலை 4– கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்டிருக்கும் பிஜேஎஸ் 8, மெந்தாரி கோர்ட் குடியிருப்பைச் சேர்ந்த 9,000 குடியிருப்பாளர்கள் நாளை தொடங்கி தடுப்பூசியைப் பெறுவர்.

அக்குடியிருப்பாளர்களிடம் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனை இன்றுடன் முடிவடைந்த பின்னர் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பெட்டாலிங் மாவட்ட  அதிகாரி டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.

இப்பகுதியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. அதே சமயம் நோய்த் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார் அவர்.

இதுவரை ஏ மற்றும் பி புளோக்கை சேர்ந்த 2,700 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மெந்தாரி கோர்ட் குடியிருப்பில் 500 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அங்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும் முதலாவது பி.கே.பி.டி. பகுதி மெந்தாரி கோர்ட் குடியிருப்பாகும் 


Pengarang :