ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

முன்னாள் கோவிட்-19 நோயாளிகள் தடுப்பூசி பெற 3 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை

ஷா ஆலம், ஜூலை 10- கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள் தடுப்பூசி பெறுவதற்கு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. 

நேற்று முன்தினம் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு குழு கூட்டத்தில் நிபுணர்கள் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

புதிய வகை நோய்த் தொற்றுகளின் பரவலைக் கருத்தில் கொண்டு முன்பு நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத கால இடைவெளிக்கு முன்னதாகவே  முன்னாள் கோவிட்-19 நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

இதன் அடிப்படையில் நோய்த் தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட முன்னாள் கோவிட்-19 நோயாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

எனினும், கோவிட்-19 சிகிச்சையின் ஒரு பகுதியாக  கோன்வெல்சென்ட் ப்ளாஸ்மா எனப்படும் ப்ளாஸ்மா தெராபி சிகிச்சையைப் பெற்றவர்களுக்கு 90 நாட்களுக்குப் பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசியை செலுத்துவதன் காரணமாக நோய்த் தடுப்பாற்றலில் இடையூறு ஏற்படும் சாத்தியத்தை தவிர்க்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 


Pengarang :