ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தெலுக் டத்தோ சுகாதார மையத்தில் 200 பேர் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், ஜூலை 12– பந்திங், தெலுக் டத்தோ சுகாதார மையத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் 200 பேர்  முதலாவது டோஸ் தடுப்பூசியை நேற்று முன்தினம் பெற்றனர்.

மூத்த குடிமக்கள் மற்றும் இந்த சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் வான் அகமது ரஸ்மான் கூறினார்.

மைசெஜாத்ரா செயலியில்  பதிவு செய்தும் இன்னும் தடுப்பூசி பெறுவதற்கான தேதி கிடைக்காத சுற்றுவட்டார மக்களும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஃபைசர் பயேஎன்டெக் மற்றும் சினோவேக் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அவர்கள் மூன்று வார காலத்தில் பெறுவர் என்றார் அவர்.

சுங்கை லோங் வட்டார மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் வரும் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வரும் தற்போதைய நிலையில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பொது மக்கள் பெரிதும் உணர்ந்துள்ளனர். ஆகவே, கோல லங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த 80 விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை விரைவில் அடைய முடியும் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :