ECONOMYHEALTHPBTSELANGOR

தொழில்துறைக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தில் 150 நிறுவனங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 15- தொழில் துறையினரை மையப்படுத்திய செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டம் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடக்கப்பட்டது முதல் இதுவரை கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்துள்ளன.

இம்மாதம் 12 ஆம் தேதி வரை சுமார் 41,000 தொழிலாளர்கள் சினோவேக் தடுப்பூசியை தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வாயிலாக பெற்றதாக செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டாக்டர் முவாஸ் ஓமார் கூறினார்.

சிலாங்கூர் அரசின் தொழில்துறையினருக்கான அந்த தடுப்பூசி திட்டத்திற்கு அதிக நிறுவனங்கள் பதிவு செய்து வருவதாக கூறிய அவர், கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாக மேலும் அதிகமான நிறுவனங்கள் இத்திட்டத்தில் பதிய வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்திலுள்ள 80 விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்க முடியும் என்றார் அவர்.

தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாயிலாக சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி பெறுவதில் பலர் காத்திருக்கும் போக்கை கடைபிடிக்கின்றனர். விரைவாக தடுப்பூசி பெற்றால் நோய்த் தொற்றிலிருந்து நாம் விரைந்து பாதுகாப்பு பெறலாம் என்றார் அவர்.


Pengarang :