ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பி.கே.பி.டி. பிறப்பிக்கப்பட்ட மெர்பாத்தி அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜூலை 27-  இம்மாதம் 18 ஆம் தேதி முதல் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட ஜாலான் பாண்டான் இண்டா மெர்பாத்தி "ஏ" அடுக்குமாடி குடியிருப்பவர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் அங்குள்ள 430 குடியிருப்பவர்களுக்கு இந்த உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக பாண்டான் இண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

தலா 60 வெள்ளி மதிப்புள்ள அரிசி, சீனி, மாவு, வெங்காயம், காய்கறிகள்,கோழி ஆகிய பொருட்கள் அடங்கிய அந்த உணவுப் பொருள்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்றார் அவர்.

இந்த உணவு உதவித் திட்டத்திற்கு தொகுதி சேவை மையமும் விவசாய மேம்பாட்டுக் கழகமும் 30,000 வெள்ளியை செலவிட்டுள்ளன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்க இந்த உதவித் திட்டம் ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்ட இடங்கள் உள்பட உதவி தேவைப்படும் அனைத்து பகுதிகளிலும் இந்த உணவு விநியோகத் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெர்பாத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 1,400 பேரிடம் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 51 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வரும் 31 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது

Pengarang :