ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 17 விழுக்காட்டினர்  தடுப்பூசி பெற்றவர்கள் 

கோலாலம்பூர், ஜூலை 28- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் 3 முதல் 5 வரையிலான நிலைகளில் பாதிக்கப்பட்ட 346 பேரில் 17.35 விழுக்காட்டினர் ஏற்கனவே தடுப்பூசி பெற்றவர்களாவர்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக இந்நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுவதோடு வைரஸ் ஏற்படுத்திய கடும் விளைவினால் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நேற்று நாட்டில் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்ட 16,117 பேரில் 2.1 விழுக்காட்டினர் இந்த மூன்று நிலைகளில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதை என்று சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

மேலும், நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட 15,771 பேரில் 12.1 விழுக்காட்டினரும் தடுப்பூசி பெற்றவர்களாவர்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் இந்நோயாளிகளில் சிலர் அதே நிலையில் இருப்பதோடு மேலும் சிலர் நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர் அல்லது மோசமான கட்டத்திற்குச் சென்றுள்ளனர் அமைச்சின்  அறிக்கை தெரிவித்தது.

 


Pengarang :