ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

லேசான அறிகுறி இருந்தால் சி.ஏ.சி. மையத்திற்கு செல்ல வேண்டாம்- கோவிட்-19 நோயாளிகளுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், ஜூலை 29- லேசான அறிகுறி கொண்ட அல்லது அறிகுறி இல்லாத கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த கோவிட்-19 நோயாளிகள் கோவிட்-19 மதிப்பீட்டு மையத்திற்கு (சி.ஏ.சி.) செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் வசிக்கும் இத்தகைய நோயாளிகள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய நோயாளிகள் உடனடியாக மற்றவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதோடு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் அது தனது டிவிட்டர் பதிவில் கூறியது.

லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் சி.ஏ.சி. மையங்களுக்கு வரவேண்டாம் என கடந்த 27ஆம் தேதி கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சு, இத்தகைய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் பட்டியலிட்டிருந்தது.

-கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்க வேண்டும்

– வீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்து இலக்கவியல் வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்படும்

– வீட்டிலிருந்து உடல் நிலையை சோதிக்கும் கருவிகள் வழி கண்டறியும் முடிவுகளை மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்க வேண்டும்.

– நோயாளியை சி.ஏ.சி. மையம் இணையம் வாயிலாக கண்காணிக்கும். தேவை ஏற்பட்டால்  நேரில் தொடர்பு கொள்ளும்.

– நோயாளிகள் சோதனைக்காக அருகிலுள்ள சி.ஏ.சி. மையங்களுக்கு வரவேண்டிய அவசியம் இருப்பின் மைசெஜாத்ரா செயலி வழி அல்லது தொலைபேசி அழைப்பின் வழி தெரிவிக்கப்படும்.

– உதவி தேவைப்படும் நோயாளிகள் 03-7723 9299 என்ற எண்களில் (காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை) அல்லது  03- 7723 9300 (காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.

– நோயின் தாக்கம் கடுமையாக இருப்பின், நோயாளிகள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.


Pengarang :