ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஊழல் சம்பவங்களை விரிவாக விசாரிப்பீர்- எம்.ஏ.சி.சி.க்கு சுல்தான் வலியுறுத்து

ஷா ஆலம், ஆக 6– சிலாங்கூரில் ஊழல் சம்பவங்கள் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாகவும் விரிவான அளவிலும் மேற்கொள்ளும்படி மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையத்தை (எம்.ஏ.சி.சி.) மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

தவறிழைத்தவர்கள் வழக்கிலிருந்து எளிதில் தப்பி விடாமலிருப்பதை உறுதி செய்ய விசாரணைகள் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், வலுவான காரணங்களின்றி வழக்கை ஒத்தி வைப்பதற்கான மனுக்களை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

ஊழல் வழக்குகள் நீண்ட காலத்திற்கு நீடிப்பதைக் கண்டு பொதுமக்கள் வெறுப்பும் சலிப்பும் அடைந்து விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊழல் பெரும் விவகாரமாக உருவெடுத்து வருங்கால சந்ததியினரையும் சமூகத்தையும் பாழ்படுத்துவதை தடுப்பதற்கு ஏதுவாக சிலாங்கூரில் ஊழல் நடவடிக்கைகள் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்பது எனது இலக்காகும் என்றார் அவர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அஸாம் பாக்கியுடன் இங்குள்ள இஸ்தானா புக்கிட் காயாங்கானில் சுமார் இரண்டு மணி நேரம் சந்திப்பு நடத்திய போது இதனைத் தெரிவித்தார். சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷாவும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.

 


Pengarang :