ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

தடுப்பூசி மையம் செல்ல பயணக் கட்டணக் கழிவு- 9,290 பேர் பயன் பெற்றனர்

ஷா ஆலம், ஆக 9- தடுப்பூசி பெறுவதற்காக பி.பி.வி. எனப்படும் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல கிராப் வாடகைக் கார் சேவையை பயன்படுத்துவோருக்கு மாநில அரசு வழங்கும் 20 கட்டணக் கழிவு திட்டத்திற்கு இதுவரை 9,290 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டவர்களில் 5,466 பேர் அக்கட்டணக் கழிவைப் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய விளக்கப் படத்தை சமூக ஊடகம் வாயிலாக பகிரிந்து கொண்ட அவர், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 109,326 வெள்ளி இது வரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வட்டார மக்களின் வசதிக்காக இந்த கட்டணக் கழிவுத் திட்டம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு இதுவரை 12,550 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதிக்குள்   எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.


Pengarang :