Pelancaran Rumah Selangorku di Setia City Convention Centre, Shah Alam pada 30 Jun 2016. Foto ARKIB SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ஐ-சிட்டியில்  கம்யூனிஸ்டு தலைவரின் மெழுகுச் சிலையா? ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுப்பு

ஷா ஆலம், ஆக 16- இங்குள்ள ஐ-சிட்டியில் அமைந்திருக்கும்  ரெட் கார்ப்பெட்  மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் சீன கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரின் சிலை உள்ளதாக இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலை ஷா ஆலம் மாநகர் மன்றம் மறுத்துள்ளது.

அந்த அருங்காட்சியகத்தில் தங்கள் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அத்தகைய சிலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் அந்த அருங்காட்சியகம் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை மேலும் தெரிவித்தது.

எந்த தகவலையும் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை நன்கு ஆராயும்படி சம்பந்தபட்ட தரப்பினரை  மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.


Pengarang :