ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

டேவான் எம்பிகேஎல் பந்திங் பாருவில் மோரிப் தொகுதி 1,400 க்கும் மேற்பட்ட நபர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றனர்.

பந்திங், 22 ஆகஸ்ட்: பிபிவி டேவான் எம்பிகேஎல் பந்திங் பாருவில் உள்ள மோரிப் சட்டமன்ற தொகுதியில் சிலாங்கூர் சமூக தடுப்பூசி (செல்வாக்ஸ்) திட்டத்தின் மூலம் 1,400 க்கும் மேற்பட்ட நபர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றனர்.

அதன் சட்டமன்ற உறுப்பினர் யூனுஸ் பஹாருதீன் இரண்டாவது ஊசி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நீடிக்கும், இதில் நேற்று மொத்தம் 600 பேரும், இன்று 800 நபர்களும் கலந்து கொள்கின்றனர்.

"இந்த மண்டபத்தில் இரண்டாவது டோஸ் ஊசி எட்டு நாட்கள் நீடிக்கும், மோரிப் சட்டமன்ற கொகுதி தொடங்கி, அதை பந்திங், தஞ்சோங் சிப்பாட் மற்றும் சிஜாங்காங்" ஆகிய தொகுதிகள் முறையே பெறும்  என்று அவர் இன்று இங்கே செல்வாக்ஸ் கோமுனிட்டி நிகழ்ச்சியை மதிப்பாய்வு செய்த பொழுது குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பந்திங் பாரு எம்பிகேஎல் ஹால் பிபிவி தலைவர் நூர் ஜஹிரா ஜைனிஸாம், கோலா லங்காட் மாவட்டத்தில் பெறுநர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கும் செயல்முறை ஆகஸ்ட் 29 அன்று முடிவடையும் என்று கூறினார்.

தடுப்பூசியை முடிக்க நான்கு மாநில தொகுதிகளில் மொத்தம் 6,007 பெறுநர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கலந்து கொள்ள முடியாவிட்டால், அவர்களுக்கு புதிய சந்திப்பு தேதி வழங்கப்படும் மற்றும் அருகில் உள்ள செல்கேர் கிளினிக்கில் பதிந்துக் கொள்ள வேண்டும்.

"இரண்டாவது டோஸ் ஊசிக்கு, மொத்தமாக 30 ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் PPV யில் சுமூகமான தடுப்பூசி செயல் முறையாக நடக்க உதவுகின்றனர்" என்று அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள 250,000 மக்களின் நலனுக்காக மாநில அரசு செல்வாக்ஸ் சமூகம் மூலம் 500,000 டோஸ் தடுப்பூசியை வழங்குகிறது.

இந்த முயற்சி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, குறைந்த வருவாய் குழு, முதியவர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களை குறிவைக்கும் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கட்டமைப்பில் சேர்க்கப் பட்டுள்ளது.


Pengarang :