ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

டூசுன் டுரியன் தோட்ட மக்களின் கைவிடப்பட்ட வீடுகள் பிரச்சனை குறித்து நான் போராடுவேன் -ஹஸ்னுல் பஹாருதீன் உறுதி.

ஷா ஆலம், 24  ஆக: சிலாங்கூர் மாநில மோரிப் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 
இம்முறை சிலாங்கூர் மாநில சட்டசபை (டிஎன்எஸ்) அமர்வில் தனது தொகுதியில் கைவிடப்பட்ட வீடுகள் பிரச்சனையை முன்வைப்பார்.

ஹஸ்னுல் பஹாருதீன் அதைத் தவிர, மோரிபில்  கோவிட் 19 நோய்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லாவிட்டாலும், கோவிட் -19 தொற்றுநோய் பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார். 

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக, நான் இருப்பதால், தொகுதி பிரச்சனையை விவாதிக்க வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது ஆனால் டூசுன் டுரியன் தோட்ட மக்களின் கைவிடப்பட்ட வீடுகள் பிரச்சனை குறித்து நான் போராடுவேன் என்றார்.

நேற்றிரவு பேஸ்புக் மீடியா சிலாங்கூரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு பேச்சு நிகழ்ச்சியின் மூலம், "கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கூட கருத்தில் கொள்ளப் படுகிறது" என்று அவர் கூறினார்.

மாநில சட்டமன்ற கூட்டம்  இங்குள்ள சிலாங்கூர் தலைமைச் செயலகஇணைப்பு கட்டிடத்தில் ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது, அது நேற்று தொடங்கி செப்டம்பர் 6 வரை நடக்கும்.

14 வது சிலாங்கூர் மாநில சட்டசபையின் நான்காவது கால மாநாட்டின் தொடக்க விழாவில் பேசும் போது சிலாங்கூரின் மாட்சிமை (DYMM) சுல்தான், அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டாம் என்றும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை புறக்கணிக்க வேண்டாம் என்றும் நினைவூட்டினார்.
 
சிலாங்கூர் சட்டமன்ற விவாதத்தின் நேரடி ஒளிபரப்பை https://selangortv.my/ மற்றும் https://www.facebook.com/MediaSelangor வழியாகப் பின்பற்றலாம். பேச்சு மற்றும் விவாத அறிக்கைகளை selangorkini.my போர்டல் மூலம் பின்பற்றலாம்.


Pengarang :