ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மாநில எதிர்க்கட்சி தலைவர் மாநிலத்திற்கு நிரந்தர தனிமைப்படுத்தும் மையத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்

 ஷா ஆலம், 25 ஆக : சிலாங்கூர் எதிர்க்கட்சித் தலைவர் சபாக் பெர்ணத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தை கோவிட் -19 நோயாளிகளுக்கான தனிமைப் படுத்தலுக்கு  நிரந்தர மையமாகப் பயன்படுத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

டத்தோ ரிஸாம் இஸ்மாயில் சமூக மண்டபம், சிலாங்கூர் ஜத்தி டீரி பயிற்சி மையம்,ஹே ரிசார்ட் சபாக் பெர்ணம் உள்ளிட்ட பிற பொருத்தமான கட்டிடங்கள் இருந்தாலும், கோவிட் தொற்றுக்கு பின் அந்த தடுப்பு மையம் என்ன ஆகும்,  அதன் மேம்பாட்டுக்கு செலவு செய்த பணம் வீணா என்று கேள்வி எழுப்பினார்.

அதைவிட, அரசுக்கு சொந்தமானது, அது பல அடிப்படை கட்டமைப்புகளுடன் கூடியது, அதனை  தொடர்ந்து தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் அக்கட்டடம் ஒரு வெள்ளை யாணை ஆவதை தடுக்கலாம்.

மேலும் சிலாங்கூர் மாநில சட்டசபையில் கூறியது போல் ஒவ்வொரு முறையும்  பேட்மிண்டன் ஹால்  அல்லது வேறு எந்த கட்டடமும் வாடகைக்கு எடுக்கும் போதும், அதற்கு வாடகை, தற்காலிக கழிப்பறை, படுக்கைகள் மற்றும் பிற உபகரணங்களுக்கு பணம் செலவழிக்க வேண்டும் என்று சுங்கை ஆயர் தவார் மாநில சட்டமன்ற உறுப்பினரான ரிஸாம் சுட்டிக்காட்டினார்.

வைரசுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதும், (ரிசார்ட்) அதைச் சரிசெய்வது டெவலப்பருக்கு அதிக நன்மைகளுக்காக கொடுக்கலாம், ”என்று அவர் கூறினார்.


Pengarang :