KUALA LUMPUR, 20 Mac — Anggota Polis Pelancong dari Balai Polis Masjid India, Sarjan Mejar Abd Manab Baki (tengah) memberi nasihat dan penerangan kepada orang awam supaya tidak bersiar-siar tanpa tujuan penting ketika membuat rondaan di sekitar jalan Masjid India susulan Perintah Kawalan Pergerakan di bawah Akta Pencegahan dan Pengawalan Penyakit Berjangkit 1988 dan Akta Polis 1967 mulai 18 Mac hingga 31 Mac ini sebagai langkah pencegahan penularan COVID-19 di seluruh negara. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பி.பி.என். இரண்டாம் கட்டத்திற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு மாறுமா? சிறப்புக் கூட்டத்தில் முடிவு

ஷா ஆலம், ஆக 30- கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால் அப்பகுதி தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மாறுவதற்கான சாத்தியம் உள்ளதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோடி காட்டினார்.

எனினும், கோவிட்-19 தடுப்பு சிறப்பு செயல்குழு அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிறகு நடத்தவிருக்கும் சந்திப்பில் இதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த மகத்தான சாதனையைப் புரிந்ததற்காக அனைவருடனும் சேர்ந்து தாமும் பெருமிதம் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 89.5 விழுக்காடு பூர்த்தியடைந்து விட்டதாக இஸ்மாயில் சப்ரி நேற்று கூறியிருந்தார்.


Pengarang :