ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ செத்தியா தொகுதியில் பி40 பிரிவைச் சேர்ந்த 500 பேருக்கு இலவச கோவிட்-19 சோதனை

பெட்டாலிங் ஜெயா, ஆக 30- இங்குள்ள டேசாரியா அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 500 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கிலான இந்த  பரிசோதனை இயக்கம் அரசு சாரா அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

தனியார் கிளினிக்குகளில் கோவிட்-19 சோதனை மேற்கொள்வதற்கு அல்லது சுய பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு போதுமான அளவுக்கு வசதி இல்லாத வசதி குறைந்த தரப்பினர் அதிகம் வசிக்கும் காரணத்தால் டேசாரியா அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனையை தாங்கள் நடத்தியதாக அவர் சொன்னார்.

இது தவிர பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 150 பேருக்கு ரொட்டி போன்ற உணவுப் பொருள்களையும் முகக்கவசம், கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு சாதனங்களையும் தாங்கள் வழஙகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் பங்காற்றி வரும் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் தேசிய தினத்தை முன்னிட்டும் இப்பொருள்கள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

Pengarang :