ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 20,897 ஆக உயர்வு

ஷா ஆலம், ஆக 31– நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20,897 கோவிட்- 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நான்கு மாநிலங்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 4,371 சம்பவங்கள் பதிவான வேளையில் சபா, சரவா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் முறையே 2,594, 2,285 மற்றும் 2,159 நேர்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட மாநிலங்களில் கெடா (1,942), பினாங்கு (1,732), கிளந்தான் (1,479), பேராக் (1,204), கோலாலம்பூர் (1,003) ஆகியவை உள்ளதாக அவர் சொன்னார்.

நாட்டின் இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- பகாங் (798), திரங்கானு (608), மலாக்கா (417), நெகிரி செம்பிலான் (215), பெர்லிஸ் (64), புத்ரா ஜெயா (25), லவுவான் (1). 


Pengarang :