ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னர் மாணவர்களின் நோய்த் தொற்று அபாயம் மீது மதிப்பீடு தேவை

ஷா ஆலம், செப் 2– மாணவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயத்திற்குள்ளாவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக வரும் அக்டோபர் மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கு செய்யப்பட்டுள்ள முடிவை மறு ஆய்வு செய்யும்படி அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தடுப்பூசி பெறாத சிறார்கள் மத்தியில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதை நாம் ஒரு படிப்பினையாக்க் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூ சிறப்பு பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தை எட்டிய கோவிட்-19 நோயாளிகளில் பெரும்பாலோர் மிகவும் அபாயக் கட்டத்தை எட்டியவர்களாக கருதப்படுகின்றனர். அவர்களின் இடத்தை சிறார்கள் நிரப்பி விடக்கூடாது என நாங்கள் கருதுகிறோம் என்றர் அவர்.

அக்டோபர் மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு சரியானதா? என மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. எந்தவொரு துறையையும் திறப்பதாக இருந்தாலும் அது குறித்து விரிவான ஆய்வை முன்னதாக நடத்துவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தை எட்டிய மாநிலங்களில் வரும் அக்டோபர்  மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்விமையச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கடந்த மாதம் 15 ஆம்  தேதி கூறியிருந்தார்.

 


Pengarang :