ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 920 பேருக்கு சிப்பாங் நகராண்மைக் கழக தொலைபேசி சேவை வழி உதவி

ஷா ஆலம், செப் 7- சிப்பாங் நகராண்மைக் கழகம் கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி தொடங்கிய தொலைபேசி உதவி சேவையின் வழி 920 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரியவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கான பால் மாவு மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இந்த சேவை கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில் இதுவ 972 பேரிடமிருந்து உதவி கோரும் அழைப்புகளை தாங்கள் பெற்றதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

நோய்த் தொற்று காரணமாக வேலை இழந்தவர்கள், வருமானம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு பால் தேவைப்படுவோர், கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள்  மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து தாங்கள் அழைப்பை பெற்றதாகவும்  அக்கழகம் தெரிவித்தது.

இந்த உதவியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்றும் அது நம்பிக்கைத் தெரிவித்த து.


Pengarang :