Bangunan Sultan Salahuddin Abdul Aziz Shah
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலலங்காட் வனப்பகுதியில் தீயை அணைக்க கடந்தாண்டில் வெ.10 லட்சம் செலவு

ஷா ஆலம், செப் 7;- கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிலாங்கூர் மாநில வனத்துறைக்கு கடந்தாண்டில் பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு  செய்தது.

கருவிகள் வாங்குவது, பம்ப் சாதனங்களை பழுதுபார்ப்பது ஊழியர்களுக்கு அலவன்ஸ் வழங்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக கடந்த ஆகஸ்டு மாதம் வரை அந்த ஒதுக்கீட்டில் ஐந்து வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மாநில வனத்துறை இயக்குநர்  பாட்சில் அப்துல் மஜிட் கூறினார்.

தீயினால் பாதிக்கப்பட்ட நிலங்களைச் சீர்படுத்தி மரங்களை நடுவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு செலவிடப்படும் 30,000 வெள்ளி இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துமீறல் சம்பவங்களை அடையாளம் காண்பதற்காக சுற்றுசூழல் துறையின் ஒத்துழைப்புடன் ரேலா உறுப்பினர்களை பணியில் அமர்த்துவது, கண்காணிப்பு கோபுரங்களை அமைப்பது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை பாதுகாக்கும் விஷயத்தில் வனத்துறை எதுவும் செய்யவில்லை என சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது தங்களுக்கு வருத்தமளிப்பதாக  உள்ளது என்று அவர் கூறினார்.

அப்பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கு நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மரங்களை நட்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. அங்கு மறுபடியும் தீவிபத்து ஏற்படுகிறது என்றார் அவர்.

விவசாய நோக்கத்திற்காக சிலர் அத்துமீறி காட்டில் நுழைவது, சிகிரெட் துண்டுகளை வீசுவது போன்ற காரணங்களால் அங்கு தீவிபத்து ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :