Pasukan petugas kesihatan Selcare menjalankan Saringan Komuniti Covid-19 dari rumah ke rumah anjuran Kerajaan Selangor secara percuma di Rantau Panjang, Klang pada 19 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் 3 நாட்கள் தொடர்ச்சியாக மூவாயிரத்திற்கும் குறைவான கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 8- சிலாங்கூர் மாநிலம் கடந்த மூன்று தினங்களாக மூவாயிரத்திற்கும்  குறைவான கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்து வருகிறது.

இன்று இம்மாநிலத்தில் 2,989 பேர் அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் நேற்று அந்த எண்ணிக்கை 2,107 ஆகவும் நேற்று முன்தினம் 2,126 ஆகவும் இருந்தது.

அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட காரணத்தால் சிலாங்கூரில் கடந்த ஒரு வார காலமாக நோய்த் தொற்று எண்ணிக்கை 3,000 முதல் 4,000 வரை மட்டுமே பதிவாகி வருகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் இன்று 19,733 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 18,547 ஆக இருந்த து.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 3,100 சம்பவங்களும் பினாங்கில் 2,474 சம்பவங்களும் சபாவில் 2,067 சம்பவங்களும் பதிவாகின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் பதிவான மாநிலங்களில் ஜொகூர் (1,867), பேராக் (1,319), கெடா (1,564), கிளந்தான் (1,471)  ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- திரங்கானு (904), கோலாலம்பூர் (537), பகாங் (700), மலாக்கா (375), நெகிரி செம்பிலான் (256), பெர்லிஸ் (74), புத்ரா ஜெயா (29), லபுவான் (7).


Pengarang :