MEDIA STATEMENTPBT

ஐந்தாண்டுகளில் பத்து லட்சம் மரங்களை நட சிலாங்கூர் திட்டம்

கிள்ளான், செப் 26- சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக அடுத்த ஐந்தாண்டுகளில் பத்து லட்சம் மரங்களை நட சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் தாங்கள் எதிர்பார்ப்பதாக  சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

மாநிலத்தில் சூழியல் முறையை பாதுகாப்பதற்கு ஏதுவாக இந்த மரம் நடும் இயக்கத்தில் அரசு சாரா அமைப்புகள் அல்லது சங்கங்கள் பங்கேற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச் சூழலை மையமாகக் கொண்ட திட்டத்திற்கு நிதி வழங்க மாநில அரசு தயாராக உள்ளது. வர்த்தக மையங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு கட்டணம் மூலம் ஊராட்சி மன்றங்கள் திரட்டிய நிதியை இதற்கு பயன்படுத்தலாம் என்றார் அவர்.

இத்திட்டத்திற்கான நிதி விண்ணப்பங்களை மாநில அரசு, ஊராட்சி மன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். இந்த விண்ணப்ப முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற புரோ500 எனப்படும் மரம் நடும் இயக்கத்தை இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நிறைவு செய்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய அவர், கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் நில அந்தஸ்து மீட்பு இம்மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டது இதற்கு தக்க சான்றாகும் என்றார்.

சுற்றுச்சூழல் விவகாரத்தில் கடுமையான சட்டங்களைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தகுதி மாற்றம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதற்கு ஈடான நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க


Pengarang :