ECONOMYHEALTHMEDIA STATEMENT

கிள்ளானில் 13 லட்சம் மக்கள் தொகையில் 800,000 பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனரா?

கிள்ளான், செப் 26- கிள்ளானில் இதுவரை எட்டு லட்சம் பேர் கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் உள்பட அனைத்து தடுப்பூசித் திட்டங்களிலும் பங்கேற்றவர்களை உள்ளடக்கிய இந்த எண்ணிக்கை மைசெஜாத்ரா செயலி வாயிலாக பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கிள்ளானில் சுமார் 13 பேர் லட்சம் பேர் உள்ளனர். இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இன்னும் 500,000 பேர் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி பெறாவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு சிலாங்கூர் அரசின் நடமாடும் தடுப்பூசி இயக்கத்தை இன்று இங்கு மேற்கொண்டோம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பண்டமாரான் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தொகுதியில் இன்றைய தினம் நடைபெறும் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்திற்கு 1,200 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தடுப்பூசி பெற வந்தவர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றார் அவர்.

இத்தகைய தடுப்பூசித் திட்டத்தை இங்கு விரைவில் மீண்டும் நடத்துவது தொடர்பில் தாம் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் அவர்களுடன் தாம் பேச்சு நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

 


Pengarang :