MEDIA STATEMENTSELANGORTOURISM

“சிலாங்கூரை வலம் வருவோம்“ சுற்றுலா இயக்கத்தை பிரபலப்படுத்த நடவடிக்கை

ஷா ஆலம், செப் 29- உள்நாட்டு சுற்றுலாத் துறையினர் மத்தியில் பிரசித்தி  பெற்ற சுற்றுலா மையங்களை பிரபலப்படுத்தும் முயற்சியாக டூரிசம் சிலாங்கூர் அமைப்பும் டூரிசம் மலேசியாவின் உள்நாட்டுப் பிரிவும் இயங்கலை வாயிலாக ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.

இதன் தொடர்பில் “சுற்றுலா செல்ல வேண்டுமா? சிலாங்கூரை முதலில் வலம் வாருங்கள்“ எனும் பிரசார இயக்கம் கடந்த ஜூன் மாதம் தொடங்கி நேற்று வரை இயங்கலை வாயிலாக கட்டங்க கட்டமாக மேற்கொள்ளப்பட்டதாக டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல் முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

புதிய இயல்புகேற்ப சிலாங்கூர் மாநிலத்தின் சுற்றுலா மையங்களை இயங்கலை வாயிலாக பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதும் இந்த இயக்கத்தில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரிலுள்ள சுற்றுலா மையங்களை அனைத்துலக தரத்திலான சுற்றுலா மையங்களாக பிரபலப்படுத்தும் நோக்கில் இயங்கலை வாயிலாக பிரசார திட்டத்தையும் தாங்கள் தொடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டுவதற்கு ஏதுவாக டூரிசம் மலேசியாவுடன் டூரிசம் சிலாங்கூர் அணுக்கமான ஒத்துழைப்பை நல்க விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :