EVENTMEDIA STATEMENTPBT

உலு லங்காட்டின் ஐந்து பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், செப் 30- நீர்க் குழாய்களின் வால்வுகளை மாற்றும் பணிக்காக கோல லங்காட்டின் ஐந்து பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நீர் விநியோகம் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பியது.

பண்டார் சுங்கை லோங், தாமான் புக்கிட் பல்மா, பண்டார் மக்கோத்தா செராஸ், கிரீன் பார்க் ரெசிடன்ஸ், பலாக்கோங் ஆகியவையே அந்த ஐந்து பகுதிகளாகும்.

நீர் விநியோகத் தடை ஏற்பட்ட காலக்கட்டத்தில் பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய பயனீட்டாளர்களுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

தாமான் ஸ்ரீ இண்டா பலாக்கோங், இன்லெட் செராஸ், தி மைன்ஸ் எதிப்புறம் ஆகிய பகுதிகளில் நீர்க் குழாய் வால்வுகளை மாற்றும் பணிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அட்டவணையிட்டப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிக்கப்பட்டது.

வால்வுகளை மாற்றும் பணி நேற்று விடியற்காலை 6.00 மணிக்கு முற்றுப்பெற்றதைத் தொடர்ந்து நீர் விநியோகப் பணிக கட்டங்க கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.


Pengarang :